சட்டப்பேரவை வைரவிழாவில் கருணாநிதி நிச்சயம் கலந்து கொள்ளமாட்டார்: ஸ்டாலின்

சட்டப்பேரவை வைரவிழாவில் கருணாநிதி நிச்சயம் கலந்து கொள்ளமாட்டார்: ஸ்டாலின்
Updated on
1 min read

சட்டப்பேரவை வைரவிழாவில் திமுக தலைவர் கருணாநிதி நிச்சயமாகக் கலந்து கொள்ள மாட்டார் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "இதுகுறித்து நான் ஏற்கனவே பலமுறை பதிலளித்திருக்கிறேன். திமுக தலைவர் கருணாநிதியின் 60 ஆண்டுகால சட்டமன்ற பணிகளை பாராட்டி வைரவிழாவாகவும், அவரது பிறந்தநாளையும் இணைத்து மிகப்பெரிய விழாவாக, வருகிற ஜூன் மாதம் 3 ஆம் தேதி கொண்டாட இருக்கிறோம்.

அதில் வட மாநிலங்களைச் சேர்ந்த, அகில இந்திய அளவிலான சில முக்கிய தலைவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொள்வாரா, கலந்து கொள்ள மாட்டாரா என விவாதமாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. நிச்சயமாக, உறுதியாக கருணாநிதி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. ஒருவேளை மருத்துவர்கள் அனுமதி தந்தால் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in