

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தை ஆண்டுக்கு சுமார் 1 கோடி பேரும், பன்னாட்டு முனையத்தை சுமார் 42 லட்சம் பேரும் பயன்படுத்தி வருகின்றனர்.
விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையத் தில் வருகை வாயிலின் வெளியே பொது மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக் கப்படவில்லை. அதனால் பயணிகளை வரவேற்க வருபவர்கள் நின்றுக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. விமானங்கள் காலதாமதமாக வரும் நிலையில் அவர்கள் கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது. ஒரு சிலர் ரூ.60 கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு, விமான நிலையத்தின் உள்ளே சென்று அமர்ந்து கொள்கின்றனர். ஆனால் பல நேரங்களில் பாதுகாப்பு கருதி டிக்கெட் கொடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
பயணிகளை வரவேற்க வந்தவர்கள் கூறியதாவது: கோடிக் கணக்கில் செலவு செய்து விமான நிலை யத்தை புதுப்பித் துள்ள நிலையில் சில ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து இருக்கை களை அமைத்திருக்கலாம். அதே போல விமான நிலையத்தின் வெளியே சுத்தமான குடிநீர் வசதியும், இலவச கழிப்பிட வசதியும் இல்லை. இவற்றையும் விமான நிலைய நிர்வாகம் ஏற்படுத்தித் தரவேண்டும்.