திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு: வழிபாட்டு தலங்களில் குவிந்த மக்கள்

திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு: வழிபாட்டு தலங்களில் குவிந்த மக்கள்
Updated on
1 min read

புத்தாண்டை முன்னிட்டு திரு வள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட் டங்களில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் ஆயிரக் கணக்கான மக்கள் குவிந்தனர்.

2017 ஆங்கில புத்தாண்டு நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி என பல்வோறு பகுதிகளிலும் தேவா லயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் காலை, திருப்படிப் பூஜையோடு புத்தாண்டு வழி பாடுகள் தொடங்கின. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பல்வேறு குழுவினரின் திருப்புகழ் பாடல்கள் பாடப்பட்டன. நேற்று இரவு தங்கத் தேர் திருவீதி உலா வெகு விமரிசையாக நடந்தது. தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுப்ரமணிய சுவாமியை தரிசித்தனர்.

திருவேற்காடு தேவி கரு மாரியம்மன் கோயிலில் கோ பூஜை, சிறப்பு அபிஷேகம் நடை பெற்றதோடு, புஷ்ப அலங்காரம் மற்றும் சந்தனக் காப்பு அலங் காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், பெரியபாளையம் பவானியம்மன் கோயில் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், திருப்போரூர் கந்தசாமி கோயில், பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆட்சிபுரீஸ்வரர் கோயில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பொதுமக்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசித்தனர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். கோயில் களில் அன்னதானம் வழங்கப் பட்டது. மாலை வேளையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in