Published : 16 Mar 2017 08:33 AM
Last Updated : 16 Mar 2017 08:33 AM

1.45 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது

தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் 1 கோடியே 45 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கோவா, லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கிய தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் மார்ச் 15-ம் தேதியுடன் (நேற்று) முடிவடைந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் இலவச மாக குழந்தைகள் மற்றும் சிறு வர்களுக்கு தடுப்பூசி போடப் பட்டது. இந்த முகாமில் 1 கோடியே 45 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுவதும் 1 கோடியே 76 லட்சம் குழந்தை கள் மற்றும் சிறுவர்கள் இருப்ப தாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

இதுவரை 1 கோடியே 45 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விடுப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர் களுக்கு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலை யங்கள், மற்றும் அரசு மருத்துவ மனைகள் மற்றும் இந்திய குழந்தைகள் மருத்துவ சங்க மருத்துவர்களால் நடத்தப்படும் மருத்துவமனைகளிலும் தொடர்ந்து தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x