வேடந்தாங்கல் சரணாலயம் மே 31 முதல் மூடல்: பறவைகள் வரத்து குறைந்ததால் வனத்துறை அறிவிப்பு

வேடந்தாங்கல் சரணாலயம் மே 31 முதல் மூடல்: பறவைகள் வரத்து குறைந்ததால் வனத்துறை அறிவிப்பு
Updated on
1 min read

வேடந்தாங்கல் சரணாலய ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந் துள்ள தால் பறவைகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், வரும் 31-ம் தேதியுடன் சரணாலாயம் மூடப்படுவதாக வனத்துறை தெரி வித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந் தகத்தை அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் 73 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியின் நடுவே, அடர்ந்த மரங்களுடன் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளுக்கான இத மான சீதோஷ்ணம் நிலவுவதால், ஆண்டுதோறும் நவம்பர் மாதத் தில் சீஸன் தொடங்கும். வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து பல்வேறு விதமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வருகின்றன. ஏரியின் நடுவே உள்ள மரக்கிளைகளில் கூடு கட்டி முட்டையிட்டு, குஞ்சு பொறிக்கும் பறவைகள் குஞ்சு கள் வளர்ந்ததும் திரும்பிச் சென்று விடுகின்றன.

பறவைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில், நவம்பர் மாதத்தில் சரணாலயம் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சீஸன் தொடங்கியதும் கடந்த செப்டம்பர் மாதம் சரணாலயம் திறக்கப்பட்டது. இந்நிலையில், பருவமழை குறைவு காரணமாக ஏரியில் நீர் இருப்பு குறைந்து காணப்படுகிறது. இதனால், பறவைகள் அருகில் உள்ள நீர் நிலைகளில் தஞ்சமடைந்து வரு கின்றன. மேலும், வெளிநாட்டு பறவைகள் சீஸன் முடிந்து தாய்நாட்டுக்கு திரும்பிச் செல் கின்றன. இதனால், பறவைக ளின்றி சரணாலயம் வெறிச் சோடிக் காணப்படுகிறது.

இதனால், வரும் 31-ம் தேதி முதல் சரணாலயம் மூடப்படுவ தாக வனத்துறை நேற்று அறி வித்துள்ளது. மேலும், சரணாலயம் மூடப்பட்ட பிறகு வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சரணாலய வனச்சரகர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in