

புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதித்தால் அடுத்த 25 ஆண்டுகளில் இப்பகுதி வாழத் தகுதியற்றதாக மாறிவிடும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.குணசேகரன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதியினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவரும், முன் னாள் எம்எல்ஏவுமான எஸ்.குண சேகரன் நேற்று அப்பகுதியை பார்வையிட்ட பின் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
எரிவாயு எடுக்கும்போது அதிலிருந்து வெளியேறும் நச்சுப் பொருட்களால் நீர், நிலம், காற்று மாசுபடும். மேலும், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கும் இது வழிவகுக்கும். எரிவாயு எடுக்கும் பணி தொடங்கினால், அடுத்த 25 ஆண்டுகளில் இப்பகுதி வாழத் தகுதியற்றதாக மாறிவிடும்.
எனவே, இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். அதற்கு முன், இப்பகுதியில் ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதுடன், கைய கப்படுத்தப்பட்ட நிலங்களையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.