

திருச்செங்கோடு அருகே இரவில் வீட்டில் தனியாக இருந்த பெண் களை கத்தி முனையில் மிரட்டி 48 பவுன் நகை, ரூ.63 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை யடித்துச் சென்ற 6 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீஸார் தீவிர மாகத் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு அருகே ஏ.இறையமங்கலம் நைனாம்பாளையம் ஆனைக்கல் காட்டைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. தோட்டத்திலுள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றுள்ளார். இரவு 10 மணியளவில் முகத்தை மூடியபடி மர்மநபர்கள் 6 பேர் வீட்டினுள் நுழைந்துள்ளனர்.
வீட்டில் இருந்த ராமசாமி மனைவி லட்சுமி, பிரசவத்துக்காக வந்திருந்த மகள் பிரேமா, ராமசாமி தாயார் பெருமாயி ஆகியோரை மர்ம கும்பல் நகை, பணத்தை தரும்படி கத்திமுனையில் மிரட்டியுள்ளனர். பின்னர் பெருமாயியின் கையை கத்தியால் கீறியுள்ளனர்.
பின்னர் குழந்தைகள், பெண் களை தனி அறையில் அடைத்து வைத்த கும்பல், வீட்டில் இருந்த 48 பவுன் நகை, ரூ.63 ஆயிரம் ரொக்கம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிவிட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மொளசி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.