எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம்: புதிய கட்சியைத் தொடங்கினார் தீபா கணவர் மாதவன்

எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம்: புதிய கட்சியைத் தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
Updated on
1 min read

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் இன்று (வியாழக்கிழமை) புதிய கட்சி தொடங்கினார். புதிய கட்சிக்கு எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் சூட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். ஆனால், அந்த அமைப்பின் நிர்வாகிகள் நியமனத்தில் அவருக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில் விரைவில் புதிய கட்சி தொடங்குவதாக மாதவன் அறிவித்திருந்தார்.

இன்று அவர் தனது புதிய கட்சியை தொடங்கினார். ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்த அவர் அங்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் புதிய கட்சியை அறிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உண்மைத் தொண்டர்கள் என்வசம் இருப்பதால் பணபலம் அவசியமில்லை" என்றார்.

படம்: க.ஸ்ரீபரத்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in