

தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால், தமிழக சட்டப்பேரவையைக் கலைக்க வேண்டும் என்று தமிழக ஆளுந ருக்கு, முன்னாள் எம்எல்ஏ மலரவன் உட்பட 5 ஆயிரம் பேர் இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர்.
தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெற்றதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ வும், தீபா பேரவை நிர்வாகியு மான மலரவன் தலைமையில் 5 ஆயிரம் பேர், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பி யுள்ளனர்.
அதில், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, தமிழக சட்டப்பேரவையைக் கலைக்க வேண்டும். உடனடியாக மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலை அறிவித்து, நடத்த வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் நீங்கும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.