தனியார் பால் விலை அதிகரிப்பால் டீ, காபி விலை உயர்கிறது

தனியார் பால் விலை அதிகரிப்பால் டீ, காபி விலை உயர்கிறது
Updated on
1 min read

தனியார் பால் விலை உயர்வு காரணமாக, சென்னையில் டீ, காபி விலையை உயர்த்த டீக்கடை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை காரணம் காட்டி, தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.2 விலை உயர்த்தியுள்ளன. இந்நிலையில், பெரும்பாலான டீக்கடைகளில் தனியார் நிறுவனங் களிடமிருந்தே பால்கள் அதிகள வில் கொள்முதல் செய்யப்படு கின்றன. இதன் காரணமாக, சென்னையில் டீ, காபி விலையை உயர்த்த டீக்கடை உரிமை யாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதுகுறித்து, திருவல்லிக் கேணியில் உள்ள டீக்கடை உரிமை யாளர்கள் சிலர் கூறுகையில், தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை கூட்டியுள்ளதால், நாங்களும் டீ, காபி ஆகியவற்றின் விலையை அதிகரிக்கும் நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளோம். ஏற்கனவே, சிலிண்டர், டீத்தூள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது.

எனவே, எங்களுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்க, டீ, காபியின் விலையை ஒரு ரூபாய் உயர்த்த திட்டமிட்டுள் ளோம். இதன்படி, சிங்கிள் டீ ரூ.7-லிருந்து 8-ம், காபி ரூ.9-லிருந்து ரூ.10-ம் அதிக ரிக்கப்படும். இந்த விலை உயர்வு ஓரிரு நாளில் அமலுக்கு வரும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in