ராம்குமாருக்கு ஜாமீன் கோரிய வழக்கறிஞரின் பின்னணி

ராம்குமாருக்கு ஜாமீன் கோரிய வழக்கறிஞரின் பின்னணி
Updated on
1 min read

சுவாதி கொலை வழக்கில் கைதாகியுள்ள ராம்குமாருக்கு ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி (64) அடிப்படையில் ஒரு சுயம்சேவக். இந்து முன்னணியில் பல்வேறு பதவிகளை வகித் தவர். தற்போது மத்திய அரசின் துறைமுகம் உள்ளிட்ட துறைகளுக்கான கூடுதல் அரசு வழக்கறிஞராக பதவி வகிக்கிறார்.

வண்ணாரப்பேட்டையை பூர்வீகமாகக் கொண்ட வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும். ராம்குமாருக்கு ஜாமீன் கோரிய வழக்கு எனது ஜூனியர் மகேந்திரனுடையது.

அதனால் அவர் சார்பில் நான் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளேன். கடந்த 35 ஆண்டுகால வழக்கறிஞர் அனுபவத்தில் வெல்டிங் குமார், வீரமணி, எண்ணூர் நாராயணன், 100-வது நாள் படத்தைப் பார்த்து 9 கொலைகளை செய்த தருமபுரி ஜெயப்பிரகாஷ் என பலருக்காக நான் ஆஜராகியுள்ளேன்.

நான் ஆஜராகியுள்ள வழக்குகளில் பெரும்பாலும் விடுதலை வாங்கியுள்ளேன். ஒரு கொள்கைக்காக ஜடை வளர்க்கிறேன். வடசென்னை பகுதிகளில் நடக்காத விநாயகர் ஊர்வலத்தை முன் நின்று நடத்தியுள்ளேன்” என்றார்.

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக் கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, ராம்குமார் சார்பில் தாக்கல் செய் துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:

கடந்த மாதம் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் சுவாதி என்ற இளம் பெண் கொலை செய்யப்பட் டார். இந்த வழக்கில் பி.ராம் குமார்(24) மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் ராம் குமாரை ஜூலை 1-ம் தேதி கைது செய்துள்ளனர். கைது செய்யப் படும்போது போலீஸாருடன் வந் தவர்கள் ராம்குமாரை அடித்தும், அவரது கழுத்தை பிளேடால் கீறியும் உள்ளனர்.

போலீஸார் உண்மைக் குற்ற வாளியை மறைத்துவிட்டு அப்பாவி கிராமத்து இளைஞரான ராம்குமாரை வழக்கில் சிக்க வைத்துள்ளனர். அவருக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்த மில்லை. ராம்குமாரின் நிரந்தர முகவரியே நெல்லை மீனாட்சிபுரம் தான். அவருக்கு ஜாமீன் அளித் தால் அவர் சாட்சிகளை கலைக்க மாட்டார். எனவே ராம்குமா ருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in