Published : 03 Apr 2017 09:30 AM
Last Updated : 03 Apr 2017 09:30 AM

விஐடி பல்கலையில் பி.டெக். படிப்புக்கான நுழைவுத் தேர்வு: ஏப்ரல் 5 முதல் 16 வரை நடைபெறுகிறது

விஐடி பல்கலையில் பி.டெக். பொறியியல் படிப்பில் சேரு வதற்கான நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது என வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஐடி பல்கலைக்கழகம், வேலூர் வளாகத்தில் இவ் வாண்டு பி.டெக். சிவில், மெக் கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பயோ டெக்னா லஜி, பயோ இன்பர்மேடிக்ஸ், பயோமெடிக்கல் இன்ஜினி யரிங், கணினி அறிவியல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட 16 வகையான படிப்பு களுக்கும், விஐடி சென்னை வளாகத்தில் பி.டெக். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவி யல் உள்ளிட்ட 7 வகையான படிப்புகளுக்கும், விஐடி போபால் வளாகத்தில் பி.டெக். எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவி யல் மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளும், விஐடி அமராவதி (ஆந்திரா) வளாகத்தில் பி.டெக். கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகியவற்றில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகள் ஏப்ரல் 5-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இத்தேர்வுகள் இந்தியா மட்டுமல்லாமல் துபாய், குவைத் உள்ளிட்ட வெளிநாடு களிலும் நடைபெறுகிறது. இந்தியாவில் மட்டும் 119 நகரங்களில் 167 மையங்களில் கணினி முறையில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை என 3 பிரிவுகளாக நுழைவுத் தேர்வுகள் நடைபெறும்.

நுழைவுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ம் தேதி www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர் களுக்கு சேர்க்கைக்கான கவுன் சலிங் ரேங்க் அடிப்படையில் மே மாதம் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும்.

சலுகைகள்

விஐடியில் செயல்படும் ‘ஜிவி’ பள்ளி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் மாநில மற்றும் மத்திய கல்வி வாரியத்தால் நடத்தப்படும் மேல்நிலை இறுதித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு 4 ஆண்டு கல்விக் கட்டணம் முழுமையும் சலுகையாக அளிக் கப்படும்.

தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் படித்து மேல்நிலை தேர்வில், மாவட்டம்தோறும் வருவாய் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள் இலவசமாக சேர்த்துக் கொள்ளப்படுவர்” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மட்டும் 119 நகரங்களில் 167 மையங்களில் கணினி முறையில் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x