இளைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் பிரதிநிதியாக சீனா சென்ற கோவை மாணவி

இளைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் பிரதிநிதியாக சீனா சென்ற கோவை மாணவி
Updated on
1 min read

என்எஸ்எஸ் திட்டம் சார்பில் மாநிலத்திலேயே சிறப்பாக செயல்பட்டமைக்காக, கோவை கல்லூரி மாணவி, இந்தியாவின் 200 பிரதிநிதிகளில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு சீனாவுக்கு சென்று வந்துள்ளார்.

இந்திய, சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையே நட்புறவு மேம்படுத்துதல் மற்றும் அமைதியை ஊக்குவிக்கும் விதத்தில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் வகையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களை தேர்ந்தெடுத்து, இளைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் பிரதிநிதிகளாக 200 பேர் சீனாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இதில் கோவை காளப்பட்டி டாக்டர் என்ஜிபி கலை அறிவியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு நுண்ணுயிரியல் பிரிவு மாணவி பி.சரண்யாஸ்ரீ, என்எஸ்எஸ் சார்பில் மாநிலத்திலேயே சிறப்பாக செயல்பட்டமைக்காக, தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஜூன் 17-ம் தேதி சீனா சென்றார்.

இது குறித்து சரண்யாஸ்ரீ கூறும்போது, ‘இந்த பயணத்தின் மூலம், அந்நாட்டு மக்களின் பண்பாடு, வாழ்க்கைமுறை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in