

ரயில் பெட்டியில் துளையிருந்த தால் திருச்சியிலிருந்து நேற்று முன் தினம் இரவு சென்னைக்கு கொண்டு செல்லப்பட இருந்த ரூ.382 கோடியை ஏற்றுவதற்கு போலீஸார் மறுத்துவிட்டனர்.
சேலத்திலிருந்து ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம், ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடிக்கப் பட்டது. இந்நிலையில், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து சேகரிக்கப்பட்ட கிழிந்த- பழைய- அழுக்கான ரூ.382 கோடியை சென்னைக்கு அனுப்பு வதற்காக வங்கி அதிகாரிகள் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத் துக்கு போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவு கொண்டு வந்தனர்.
அங்கு, பணப் பெட்டிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப் பட்டிருந்த ரயில் பெட்டியின் ஜன்னல் பகுதியில் துளையிடப் பட்டிருந்தது. இதைக் கண்ட பாது காப்பு போலீஸாரும், வங்கி அதி காரிகளும் அதில் பணத்தைக் கொண்டு செல்வது பாதுகாப்பாக இருக்காது என்று கூறி, பணப் பெட்டி களை ஏற்ற மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து, ரயில்வே அலு வலர்களுக்கு தகவல் அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, வேறு ரயில் பெட்டி வரவழைக்கப்பட்டு, அதில் ரூ.382 கோடி பணம் ஏற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
பின்னர், அந்த ரயில் பெட்டி மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலுடன் இணைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.