அமைச்சரை அனுசரித்துப் போகாததால் ஆட்டம் காண்கிறதா ஆணையர் பதவி?

அமைச்சரை அனுசரித்துப் போகாததால் ஆட்டம் காண்கிறதா ஆணையர் பதவி?
Updated on
2 min read

திருப்பூர் மாநகர் காவல்துறை ஆணையர் செந்தாமரைக்கண்ணன் மாற்றப்பட்டார் என்ற வதந்தி வெள்ளிக்கிழமை மாலை முதல் காட்டுத் தீ போல சென்னை வரை பரவத் தொடங்கிவிட்டது.

திருப்பூர் மாநகர் காவல்துறைக் கும், வனத்துறை அமைச்சருக்கும் இடையே பிரச்சினை; செந் தாமரைக்கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், காத் திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் விதவிதமாக வதந்திகள் பல ரூபங்களில் பறந்தன. விசாரிக்க களம் இறங்கியபோது கிடைத்த தகவல்கள்:

காவல் ஆணையரகம்

திருப்பூர் மாநகர் காவல் ஆணையரகம் நவ.19-ம் தேதி தொடங்கப்பட்டு ஆணையராக என்.கே.செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டார். அதற்குப் பின்னர், அரசியல் கட்சிகளுக்கு கூட்டங்கள் நடத்துவது வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், காவல் நிலைய ஆய்வாளர்களை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதை, எழுத்துப் பூர்வமாக, சென்னை டி.ஜி.பி. அலு வலகத் துக்கு அனுப்பினாராம். இது தான் பிரச்சினையின் ஆரம்ப விதை என் கின்றனர் காவல்துறையினர்.

தலைக் கவசம்

திருப்பூரில் ஜன.10-ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டு நர்கள் தலைக் கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டது. இதை விஸ்வரூபமாக்கியது அ.தி.மு.க.

கடந்த சில தினங்களுக்கு முன், காவல் ஆணையர் செந்தாமரைக் கண்ணன், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அழைக்கப்பட்டு கேட்டபோது, ‘நான், என் கடமை யைச் செய்கிறேன். அது எப்படி மக் களுக்கு தொந்தரவாக அமையும்’ என பதில் கூறினாராம்.

கடந்த திங்கள்கிழமை, திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக சாலையின் இருபுறங் கள் நடுவிலுள்ள தடுப்புச் சுவர் உள்ளிட்டவற்றில், உரிய அனு மதி இன்றி அ.தி.மு.க-வினர் கொடிகளைக் கட்டியதாக அ.தி.மு.க பிரமுகர்கள் 6 பேர் மீது அனுப்பர்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர்.

எப்படி அரசியல் பண்றது?

‘நீங்க, இப்படி செய்துக் கிட்டிருந்தா, எப்படி அரசியல் பண்றது? கட்சிக்காரங்க எப்படி எங்களை மதிப்பாங்க’ என்பது போன்ற வார்த்தைகள் அமைச்சர் தரப்பிலிருந்து காவல் ஆணையருக்குச் சென்றதாம். இதில், முகம் சிவந்த ஆணையர், அதிமுகவினர் தொடர்பான பழைய வழக்குகளை தூசி தட்டிப் பார்க்கச் சொன்னதாகவும் தகவல்.

இந்நிலையில், அ.தி.மு.க-வினருக்கும், காவல்துறைக்கும் பனிப்போர் உச்சத்தை எட்டி யுள்ளது. அதுதான்... தற்போதைய காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் இடம் மாற்றப்பட்டார் என்ற வதந்திக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

பிரச்சினை இல்லை

அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்த னிடம் கேட்டபோது, `பிரச்சினை ஒண்ணும் இல்லை. காவல்துறை விதியை கடைப்பிடிச்சே தீரணும்னு சொன்னாங்க. ஒரு 2 நாள் பொறுங்கன்னு சொன்னோம். அதுக்குள்ள, கட்சிக்காரங்க மேல வழக்குப் போட் டாங்க. திருப்பூரைப் பொறுத்தவரை அவருக்குத் தெரியலை. முக்கிய மான நிகழ்வுகள் வரும்போது அ.தி.மு.க-வுக்கு மட்டுமில்லை; எல்லாக் கட்சிகளுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்கன்னு சொன்னோம்.

அப்பத்தான் என்ன நிகழ்ச்சி நடக்குதுன்னு மத்தவங்களுக்குத் தெரியும். அதை, கலெக்டர் அலுவலகத்தில் அழைத்து விளக்கிச் சொன்னோம்' என்றார். திருப்பூருக்கு புதிய காவல் ஆணையராக அருண் என்பவர் வர இருப்பதாக ஆருடம் சொல்லி, அதை தீவிரமாகப் பரப்பவும் தொடங்கிவிட்டனர் திருப்பூர் அ.தி.மு.க-வினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in