

தமிழ் சமூகம் நேர்மையை அடை யாளம் காணத் தொடங்கியிருப் பதால் மகத்தான மாற்றம் வரப் போகிறது என்று ஐஏஎஸ் அதி காரி உ.சகாயம் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்கள் பாதை அமைப்பு சார் பில் கைத்தறி ஆடையகம் திறப்பு விழா சென்னை அம்பத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில், ஐஏஎஸ் அதிகாரியும், மக்கள் பாதை அமைப்பின் வழிகாட்டியு மான உ.சகாயம் கலந்துகொண்டு ஆடையகத்தைத் திறந்து வைத்துப் பேசியதாவது:
நெசவாளர்களிடம் இருந்து துணியை வாங்கி அதை விற்பனை செய்து கிடைக்கும் லாபம் முழு வதையும் நெசவாளர்களுக்கு வழங் கும் ‘தறித்திட்டம்’ எதிர்காலத்தில் மிகச்சிறந்த திட்டமாகவும், ஆயிரக் கணக்கான நெசவாளர்களை வாழ் விக்க வந்த வரமாகவும் இருக்கும்.
நமது இளைஞர்கள் சென்னை அருகே உள்ள புழல் ஏரியை புனரமைத்தார்கள். அப்பகுதியை நான் பார்க்கச் சென்றபோது கோவையைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் எனக்கு கைகொடுத்தான். அவனைப் பார்த்து, ‘எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய்’ என்றேன். அதற்கு உங்களைப் போல ஆட்சியராகி ஏழைகளுக்கு நல்லது செய்வேன் என்றான்.
ஏரிக் கரையில் இருந்து இறங்கியபோது அங்கு நின்றிருந்த பொன்னேரியைச் சேர்ந்த சிறுமி நித்யயிடம் இதே கேள்வியைக் கேட்டேன். அவளும் ஆட்சியராகி ஏழைகளுக்கு உதவப் போகிறேன் என்றாள். இருவரும் மிக உறுதி யாகச் சொன்னார்கள். நமது குழந் தைகள் மாறத் தொடங்கிவிட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. நாமும் மாறத் தொடங்கிவிட்டோம்.
நான் அண்மையில் குடும்பத் துடன் காரில் மதுரை சென்றேன். அப்போது எங்களை ஒரு கார் பின்தொடர்ந்தது. ஏற்கெனவே எனக்கு மிரட்டல்கள் உள்ளன. இப்போதெல்லாம் வாகனத்தில் செல்பவர்கள் எப்படி இறக்கிறார்கள் என்பது மர்மமாக இருக்கிறது. அதனால்தான் உஷாராக இருக்க எண்ணினேன். அந்த காரில் வந்த நபர் எனது காருக்கு இணையாக வந்து இருகை கூப்பி வணக்கம் தெரிவித்தார். நானும் வணக்கம் தெரிவித்துவிட்டு பார்த்து கவனமாகச் செல்லுங்கள் என்றேன். எனது தமிழ்ச் சமூகம் நேர்மையை அடையாளம் காணத் தொடங்கியிருப்பதன் அடையாள மாக இதைப் பார்க்கிறேன். இளைஞர்களில் பெரும் பகுதியினர் நேர்மையை அடையாளம் காணத் தொடங்கியுள்ளனர்.
நட்சத்திரங்களை நம்பித்தான் எனது சமூகம் வீழ்ந்து கிடக் கிறது. மெரினாவில் இளைஞர் கள் நட்சத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மகத்தான புரட்சியை நிகழ்த்தினார்கள். இது காளைக் கான புரட்சி அல்ல. நாளைக்கான புரட்சி என்று அப்போது நான் சொன்னேன். தமிழ் சமூகத்தில் மகத்தான மாற்றம் நிகழப் போகிறது என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
நான் நேர்மையாக இருப்பதைப் பார்த்து பைத்தியக்காரன் என்றார் கள். உலகத்தில் பல வர லாற்று மாற்றங்கள் பைத்தியக் காரர்களால்தான் நடந்துள்ளன. புதிய தமிழ்ச் சமூகத்தை நாம் எல்லோரும் சேர்ந்து படைப்போம் என்றார் சகாயம்.