4.4 கிலோ மனித உடலுக்கு மரபணு சோதனை: உயர் நீதிமன்றம் உத்தரவு

4.4 கிலோ மனித உடலுக்கு மரபணு சோதனை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கத்தார் நாட்டில் இளையான்குடி இளைஞர் தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்த இளைஞரின் உடலை மரபணு சோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி அ.புதூரைச் சேர்ந்த அமிர்தவள்ளி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது மகன் கோபாலகிருஷ் ணன்(22) கத்தார் நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கடந்த 14.12.2016 முதல் கோபாலகிருஷ்ணன் காணாமல் போய்விட்டதாக அவருடன் பணிபுரிந்த ஒருவர் என் கணவரிடம் போனில் தெரிவித்தார். என் மகனைக் கண்டுபிடிக்கக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினேன். இரு மாதம் கழித்து கத்தார் நிறுவனத்தில் இருந்து, எனது மகன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் மீட்கப்பட்டிருப்பதாகவும், உடலை இந்தியாவுக்கு அனுப்புவதாகவும், உடலை பெற்றுக்கொள்ளுமாறும் தகவல் தெரிவித்தனர்.

இறந்தது என் மகன்தான் என கத்தாரில் மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப் படவில்லை. வேறு நபரின் உடலை எனது மகன் உடல் என ஒப்படைக்க முயல்கின்றனர். என் மகன் மாயமான விவ காரத்தை மறைப்பதற்காக வேறு நபரின் உடலை ஒப்படைக்க முயல்வதாக சந்தேகம் உள்ளது. என் மகன் காணாமல்போனதில் உள்ள சந்தேகத்தை நிவர்த்தி செய்யக்கோரி அதிகாரிகளுக்கு 4.4.2017-ல் மனு அனுப்பினேன். என் மகனைக் கண்டுபிடிக்கவோ, என் மகனை இந்தியாவுக்கு அழைத்து வரவோ நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் 4.400 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலை கொண்டு வந்து, அந்த உடல் எனது மகனின் உடல் என்றும், அதைப் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரி கள் வற்புறுத்தி வருகின்றனர். இதனால் என் மகன் மாய மானதில் மர்மம் இருப்பது உறுதியாகியுள் ளது. இதனால் என் மகனைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பி.வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கத்தாரில் இருந்து கொண்டு வரப்பட்டு, தற்போது சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ள உடல் மனுதாரரின் மகன்தானா என கண்டறிய மரபணு பரிசோதனைக்கு மனுதாரர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறி, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in