Published : 15 Jun 2016 07:32 AM
Last Updated : 15 Jun 2016 07:32 AM

உள்ளாட்சி தேர்தலில் கிராமங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த நடவடிக்கை: சட்டத் திருத்தம் கோரி ஆளுநரிடம் திமுக மனு

உள்ளாட்சித் தேர்தல் தொடர் பாக தமிழக ஆளுநர் கே.ரோசய்யா விடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. 2 மனுக் களை அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலின்போது நகர்ப்புறங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், கிராமப்புறங்களில் வாக்குச்சீட்டு முறையும் பயன்படுத்தப்பட்டன. இது மக்களை பிரித்துப் பார்ப் பதற்கு சமம். மேலும், கிராமப்புறங் களில்கூட சட்டப்பேரவை, நாடாளு மன்ற தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்போது, உள் ளாட்சித் தேர்தலுக்கு மட்டும் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த தேவையில்லை. இதனால் குளறு படிகள் ஏற்படுகின்றன.

எனவே, தமிழகத்தில் சில மாதங் களில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு, கிராமங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களையே பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் நேரம், உழைப்பு, பணம் சேமிக்கப்படும்.

இதற்கேற்ப தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1994, தமிழ்நாடு பஞ்சாயத்து (தேர்தல்) விதிமுறைகள் 1995, மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 43டி ஆகியவற்றில், உங்கள் அதி காரத்தைப் பயன்படுத்தி திருத்தம் கொண்டுவர வேண்டும்.

வெளி மாநில அதிகாரிகள்

உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, இணை இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாநகராட்சி, நகராட்சி ஆணையர் கள், நகர பஞ்சாயத்து செயல் அலு வலர்கள் தேர்தல் பொறுப்பாளர் களாக பணியாற்றுகின்றனர். இவர் கள் ஆளுங்கட்சியினருக்கு ஆதர வாக செயல்பட வாய்ப்பு உள்ள தால், தேர்தல் பார்வையாளர்களாக ஆட்சியர்களுக்கு பதிலாக, வெளி மாநில ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இதர தேர்தல் அலுவலர்களாக வெளி மாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x