

சென்னை திருவல்லிக்கேணியில் உ.வே.சா. வாழ்ந்த வீட்டை நினை விடமாக மாற்ற தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது:
‘தமிழ் தாத்தா’ என்று போற்றப் படும் உ.வே.சாமிநாதய்யர் தஞ்சா வூர் மாவட்டம் உத்தமதான புரத்தில் பிறந்தாலும்கூட, அவரது வாழ்க்கையில் பெரும் பகுதியை சென்னையில்தான் கழித்தார். சென்னையில் மாநிலக் கல்லூரியில் பணியாற்றியபோது, அருகே திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் இருந்த வீட்டில் வாடகைக்கு குடியேறினார். பின்னர் அந்த வீட்டை விலைக்கு வாங்கி வாழ்ந்தார்.
கவனிக்கப்படாத கோரிக்கை
அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாரிசுகள் அந்த வீட்டை விற்றுவிட்டனர். அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி உ.வே.சாமிநாதய்யருக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கண்டுகொள்ள வில்லை. அக்கட்டிடத்தை வாங்கியவர்கள் அதை தரைமட்ட மாக்கியதுடன், அடுக்குமாடி குடி யிருப்பு கட்டும் தங்கள் விருப் பத்தையும் நிறைவேற்றி விட்டனர்.
உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சாமிநாதய்யரின் பாரம் பரிய இல்லம், நூலகத்துடன் கூடிய நினைவு இல்லமாக மாற்றப் பட்டுள்ளது. அதேபோல, அவர் தனது வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த திருவல்லிக்கேணி இல்லத்தையும் நினைவிடமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்த அறிவிப்பை தமிழ் தாத்தா உ.வே.சா.வின் 162-வது பிறந்தநாளான 19-ம் தேதி அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.