

கொலை நகரமாக சென்னை மாறி வருவதைத் தமிழக அரசு தடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியது:
தமிழகத்தில் சுகாதாரத் துறை எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை மேட்டூர் அரசு மருத்துவ மனையில் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் மூலம் அறிய முடிகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு இதுபோன்று அடுத்தடுத்து நடந்துவரும் கொலை சம்பவங் களால், சென்னை கொலை நகரமாக மாறி வருவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை மக்கள் நலக் கூட்டணி வலிமையோடு சந்திக்கும் என்றார்.