திருச்சி போலீஸாருக்கு நடிகர் சூர்யா பாராட்டு

திருச்சி போலீஸாருக்கு நடிகர் சூர்யா பாராட்டு
Updated on
1 min read

திருச்சியில் ஜல்லிக்கட்டு போராட் டம் அமைதியான முறையில் நடைபெற காரணமாக இருந்து சிறப்பாக பாதுகாப்பு அளித்த திருச்சி போலீஸாருக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்தார்.

சிங்கம்-3 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக நேற்று திருச்சி வந்திருந்த நடிகர் சூர்யா, இயக்குநர் ஹரி ஆகியோர் மாநகர காவல் ஆணையர் ஏ.அருணைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது, ‘காக்க காக்க’ மற்றும் அதைத் தொடர்ந்து காவல் அதிகாரியாக, தான் நடித்த படங்களில் மாநகர காவல் ஆணையர் அருணை முன்மாதிரியாகக் கொண்டே நடித்ததாக நடிகர் சூர்யா தெரிவித்தார். மேலும், தான் நடித்து விரைவில் வெளிவர உள்ள சிங்கம்-3 படத்தின் திருட்டு டிவிடிக்கள் வெளிவராமல் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

திருச்சியில் ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியான முறை யில் நடைபெறும் வகையில், சிறப்பாக பாதுகாப்பு அளித் ததாகக் கூறி மாநகர காவல் ஆணையர் அருண் மற்றும் காவல் துறையினருக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்தார்.

மாநகர காவல் ஆணையர் அருணும், நடிகர் சூர்யாவும் நண்பர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in