Published : 13 Feb 2014 12:40 PM
Last Updated : 13 Feb 2014 12:40 PM

கூவம் நதியை சீரமைக்க ரூ.3,834 கோடியில் திட்டம்

சென்னையில் கூவம் நதியை சீரமைக்க ரூ.3833.62 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2014-15 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னையில் உள்ள ஆறுகளில் கழிவு நீர் சேரும் 337 இடங்களில், 179 இடங்களில் அதைத் தடுத்து, இந்த ஆறுகளைச் சீரமைப்பதற்காக 150 கோடி ரூபாய் செலவில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் வரும் 2015-ல் முடிவடையும். 163 கோடி ரூபாய் செலவில் 2014-2015 ஆம் ஆண்டில் மீதமுள்ள 158 இடங்களிலும் பணிகள் தொடங்கப்படும்.

கூவம் நதியை முழுமையாகச் கீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு பெரும் திட்டம் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும். மொத்தம் 3,833.62 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்தப் பெரும் திட்டம் ஐந்து ஆண்களில் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய குடும்பகளுக்கு நிவாரணம் அளிக்கவும், மறுகுடியமர்வு செய்யவும் 2,077.29 கோடி ரூபாய் செலவிடப்படும்.

இத்திட்டத்தை, 'சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை' ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக 2014-2015 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x