

அமைச்சர் உட்பட 4 மாவட்ட செயலாளர்களை நீக்கம் செய்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஈரோடு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பொறுப்பில் இருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் விடுவிக்கப்ப டுகிறார்.
அந்த பொறுப்பில் ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் அந்தப் பணிகளை கூடுதலாக கவனிப்பார்.
நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து கே.அர்.அர்ஜூனன் எம்பி விடுவிக்க ப்படுகிறார். அந்த பொறுப்பில் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பால.நந்தகுமார் நியமிக்கப்படுகிறார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து என்.பாலசந்தர் விடுவிக்கப்படுகிறார். அந்த பொறுப்பில் ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை மாவட்ட பணிகளை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணி யன் கூடுதலாக மேற்கொள்வார்.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து ஜி.முனியசாமி விடுவிக்கப்ப டுகிறார்.
அந்த பொறுப்பில் ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட பணிகளை கூடுதலாக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ மேற்கொள்வார்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.