

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ரகசிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும் என்று பாஜக மாநில பிரச்சார அணி செயலாளர் ராஜரத்தினம் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: தமிழக சட்டப்பேரவை யில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நடந்த நிகழ்வுகள் இந்திய ஜன நாயகத்தின் கரும்புள்ளி. எதிர்க் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட கிட்டத்தட்ட சரிபாதி சட்டப் பேரவை உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. இக்கோரிக்கையை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக் கொள்ளாததன் விளைவாகவே பேரவை போர்க்களமாக மாறியது.
சட்டப்பேரவையில் அதிமுக வினரைத் தவிர்த்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் வெளி யேற்றிவிட்டு அதிமுக உறுப்பினர் களை மட்டுமே கொண்டு அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற தாக கூறுவது ஜனநாயகமற்ற செயல்பாடாகும்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் களுக்கிடையே முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை யில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் கள் அரசை எதிர்த்து வாக்களித் துள்ளனர். இந்த வாக்கெடுப்பு மக்களின் மனநிலைக்கு எதிரானது. இதை எதிர்த்து சென்னை காந்தி சிலை அருகே போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை கைது செய்ததை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் தமிழக ஆளுநர் உடனடியாக விசாரணை செய்து, சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையான சுதந்திரத்துடன் வாக்களிக்க வாய்ப்பிருந்ததா என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். இவ்வாறு இதில் கூறியுள்ளார்.