

எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை - வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் இலக்கிய உலகில் 'ஜே.கே' என்று அழைக்கப்படும் 80 வயது எழுத்தாளர் ஜெயகாந்தன் 1950களில் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். மத்திய அரசின் இலக்கியத்துக்கான மிக உயரிதாகக் கருதப்படும் ஞான பீட விருதையும் பெற்றவர்.
அரசியல், இலக்கியம், சினிமா என பல்வேறு தளங்களில் இயங்கிய ஜெயகாந்தன், 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' உள்ளிட்ட பல முக்கிய இலக்கியப் படைப்புகளை தந்துள்ளார்.
தனது தைரியமான எழுத்துகளால் சமூகத்தைப் பிரதிபலித்த எழுத்தாளராகப் போற்றப்பட்ட இவர், இளம் எழுத்தாளர் பலருக்கும் எழுத்துலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.