

19 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் பொதுமக்கள்பார்வையிடுவதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை திறக்கப்பட்டது.
ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்துவைத்தார்.
இன்று (வியாழக்கிழமை) மட்டும் கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம். அடுத்த நாளில் இருந்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நுழைவுக் கட்டணம் செலுத்தி பார்வையிட அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.