Published : 27 Dec 2016 09:05 AM
Last Updated : 27 Dec 2016 09:05 AM

ராம மோகனராவ், விவேக் பாஸ்போர்ட்களை முடக்க ஆலோசனை: வருமான வரித்துறை அதிகாரிகள் பரபரப்பு தகவல்

ராமமோகனராவ் மற்றும் அவரது மகன் விவேக்கின் பாஸ்போர்ட்களை முடக்க வருமான வரித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகனராவ், அவரது மகன், நண்பர் வீடு, அலுவலகம் என 14 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அங்கிருந்தும் கோடிக்கணக்கான நகை, பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ராம மோகனராவ், விவேக், நண்பர் அமலநாதனுக்கு சம்மன் அனுப்பப் பட்டது. அமலநாதன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டார்.

ராம மோகனராவ் நெஞ்சு வலிப்ப தாக போரூரில் உள்ள ராமச்சந் திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். நேற்று 3-வது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விவேக், தனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இருவரின் கோரிக்கை களையும் வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இருவரையும் கைது செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இருவரும் வெளிநாடு தப்பிச் சென்றுவிடாமல் இருக்க பாஸ்போர்ட்டை முடக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஸ்கர் ரெட்டியும், விவேக்கும், தொழில் முறை கூட்டாளிகளாகவே வலம் வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு பல வழிகளில் ராம மோகனராவ் சாதகமான நிலையை எடுத்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னணி நிறுவனங்கள் பலவற் றிடம் இருந்தும் ஒப்பந்த பணிகளை இவர் பெற்றுக் கொடுத்துள்ளார். தமிழ்நாடு சுற்றுலா துறை, தென்னக ரயில்வே ஆகியவற்றின் ஒப்பந்தப் பணிகளையும் பாஸ்கர் ரெட்டியும், விவேக்கும் கூட்டாக மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்திலும் விவேக் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் சொகுசு வீடுகளை விவேக் வாங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. சுமார் 500 வீடுகளை இதுபோன்று அவர் வாங்கி இருக்கிறார். இதற்கான ஆவணங்களையும் வரு மான வரித்துறை அதிகாரிகள் சோதனையின்போது பறிமுதல் செய் துள்ளனர்.

இதன் மூலம் ராம மோகனராவை போல அவரது மகன் விவேக் மீதான பிடியும் இறுகி உள்ளது. அவர் மீது அடுத்தடுத்த நடவடிக்கைகள் பாய உள்ளதாக வருமான வரித்துறை அதி காரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ராம மோகனராவ் தலைமை செயலாளராக இருந்த காலகட்டத்தில் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட அத்தனை ஒப்பந்தங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போதுதான் இதுபோன்ற பல உண்மைகள் வெளி வந்துள்ளன.

விவேக் 6 தொழில் நிறுவனங்களை நடத்தி வந்ததாகவும், ஏற்றுமதி இறக்குமதி தொழிலையும் செய்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரது நண்பரான பாஸ்கர் ரெட்டி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனை மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேவையான செக் யூரிட்டிகளை பணியமர்த்தும் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளதாகவும், இதன்படி, 63 இடங்களில் ஆட்களை பணி அமர்த்தியதில் ஆண்டுதோறும் சுமார் ரூ.150 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகப்படு கின்றனர்.

மேலும், அரசு மருத்துவமனைக்கு தேவையான விலை உயர்ந்த உபகரணங்களை வாங்கிக் கொடுக்கும் பணியையும் விவேக் செய்து பல கோடி ரூபாய் கமிஷனாக சம்பாதித் துள்ளாராம். இதற்கான ஏற்பாடுகளை ராமமோகனராவ் செய்து கொடுத் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பதி உண்டியலில் காணிக்கை யாக போடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை அப்போது, தேவஸ்தான உறுப்பினராக இருந்த சேகர் ரெட்டி எடுத்துக் கொண்டு அதற்கு மாற்றாக தன்னிடம் இருந்த கோடிக்கணக்கான கறுப்புப் பணத்தை கொடுத்துள்ளார்.

இதற்கு தேவஸ்தானத்தில் இருந்த சிலர் உதவி செய்துள்ளனர். அவர் களின் பட்டியலையும் வருமான வரித்துறையினர் எடுத்துள்ளனர். மேலும், இதற்காக ஆந்திர அரசின் வாகனமும் சட்ட விரோதமாக பயன் படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை கேட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்ய வருமான வரித்துறையினர் வியூகம் வகுத்துள்ளனர்.

தற்போது தமிழகம் முழுவதும் 180 வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமையிலான தனிப்படையினர் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து வாடகை வாகனங்களில் புறப்பட்டு கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். அரசு வாகனங்களை பயன்படுத் தினால் சந்தேகம் வந்துவிடும் என்பதற்காக இந்த ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

வீடு திரும்பினார்

சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராம மோகனராவ் உடல் நலம் பெற்று நேற்று இரவு வீடு திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x