

வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
''தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே, ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் இருக்கும்.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக மதுரையில் 100.4 டிகிரி பாரன்ஹீட், தூத்துக்குடியில் 96.26 டிகிரி பாரன்ஹீட், கரூரில் 95 டிகிரி பாரன்ஹீட், சென்னையில் 92.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மழையைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக கடலூரில் 68 மி.மீ, பரங்கிப்பேட்டையில் 59 மி.மீ, வேலூரில் 36.7 மி.மீ, வால்பாறையில் 10 மி.மீ, சென்னையில் 4.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது'' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.