

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. சிறப்புக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட உள்ளது என்றும் தனபால் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சபாநாயகர் தனபால் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. சிறப்புக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நாளை நிறைவேற்றப்படுகிறது. சோ, கோ.சி.மணி ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட உள்ளது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடன் பேரவை ஒத்திவைக்கப்படும்.
பிப்ரவரி 1 வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. நாள்தோறும் காலை 10 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் இடம்பெறும்'' என்று தனபால் கூறியுள்ளார்.
ஜனவரி 27,30,31 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரை மீதான் விவாதம் நடைபெறும். ஆளுநர் உரை மீதான பதிலுரை பிப்ரவரி 1-ம் தேதி இடம்பெறும்.