

நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட சில பகுதிகளில் வரும் 31, 1-ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என குடிநீர்வாரியம் தெரிவித்துள்ளது.
நெம்மேலியிலுள்ள, நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் சில முக்கியமான பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அடையார், பெசன்ட் நகர், திருவான்மியூர், வேளச்சேரி (பகுதி), தரமணி (பகுதி) கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, ஈ.சி.ஆர் (நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம்), பழைய மகாபலிபுரம் ரோடு (ஒக்கியம் துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி) போன்ற பகுதிகளுக்கு 31-ம் தேதி காலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் பொது மக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துப்படுகிறார்கள். மேலும், அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள கீழ்க்காணும் அலுவலர்களை தொடர்பு கொள் ளவும். பகுதிப்பொறியாளர்-13 கைபேசி எண். 8144930913 - (அடையார், பெசன்ட் நகர், திருவான்மியூர், வேளச்சேரி (பகுதி), தரமணி (பகுதி)).
பகுதிப்பொறியாளர்-14-கைபேசி எண்8144930914 - (கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி)
பகுதிப்பொறியாளர்-15- கைபேசி எண் 8144930915 - (ஈ.சி.ஆர் (நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம்), பழைய மகாபலிபுரம் ரோடு (ஒக்கியம் துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ் சேரி). சென்னைக் குடிநீர் வாரியம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.