

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வைரஸ் காய்ச்சல் பரவி வரு கிறது. இந்த வைரஸ் காய்ச்சலால் கடந்த 3 வாரங்களில் காவேரி ராஜ புரம், கீரப்பாக்கம், மீஞ்சூர், பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதி களை சேர்ந்த 8 பேர் உயிரிழந் துள்ளனர். மருத்துவமனை களில் 130-க் கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோய் பரவலை தடுக்கும் பணி யில், மாவட்ட நிர்வாக மும், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி துறை அதிகா ரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவள் ளூர் நகராட்சியின் 12-வது வார்டு மாரப்பன் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் என்ப வரின் 2 வயது மகன் தீபக், கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்துள் ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இத னால், திருவள்ளூர் மக்கள் டெங்கு காய்ச்சல் பீதியில் உறைந்துள் ளனர். எனினும் மாவட்ட சுகாதாரத்துறை, ‘குழந்தை தீபக், வைரஸ் காய்ச்சலால் உயிரிழக்கவில்லை’ என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ‘தி இந்து’ விடம் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித் ததாவது: குழந்தை தீபக், ஆஸ்துமா நோயினால் பாதிக் கப்பட்டு தனியார் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளான். கடந்த சில நாட்களாக நோயின் தாக்கம் அதிகரித்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சிகிச் சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு பெற்றோரால் அக் குழந்தை அழைத்து வரப்பட்ட போது, மருத்துவர்களின் பரிசோ தனையில் தீபக் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
எனவே, குழந்தை தீபக் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப் படவில்லை. இருப் பினும், குழந்தை தீபக் வீடு அமைந்துள்ள பகுதியில் சுகாதாரத் துறையினர், வீடு வீடாக சென்று மருத் துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் தெரி வித்தார். திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், குழந்தை தீபக்கின் வீட்டுக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.