Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM

புழல் சிறை வளாகத்தில் களைகட்டும் ‘பிரீடம் விற்பனையகம்

புழல் சிறை வளாகத்தில் திறக்கப் பட்டுள்ள விற்பனை கூடத்தில், கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னையை அடுத்த புழல் மத்திய சிறை வளாகத்தில், ‘பிரீடம்’ என்ற விற்பனை கூடத்தை, முதல்வர் ஜெயலலிதா அண்மையில் திறந்து வைத்தார்.

இங்கு தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் உள்ள தண்டனைக் கைதிகளால் தயாரிக் கப்படும் பேக்கரி பொருட்கள், காலணிகள், கொசுவலைகள், மெழுகுவர்த்தி, மசாலா பொடிகள், சோப்புகள், மழைக் கோட்டு, துணி வகைகள், ஆயத்த ஆடை கள் உள்ளிட்ட பொருட்கள் விற்ப னைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வெளிச்சந்தையில் ரூபாய் 20க்கு விற்கப்படும் சோப்புகள் இங்கு ரூ.10 முதல் 15 ரூபாய்க்குள் விற்கப்படுகி றது. அதேபோல், 15 ரூபாய்க்கு விற்கப்படும் கேக் 5 ரூபாய்க்கும், ரூ.45க்கு விற்கப்படும் காராசேவ் இங்கு ரூ.25க்கும் விற்கப்படுகிறது.

அத்துடன், மற்ற பொருட்களும் வெளி சந்தையை ஒப்பிடுகையில் கணிசமாக குறைவாக உள்ளது. இந்த பொருட்கள் சிறைக்கு வரும் பார்வையாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து, சிறையில் இருக்கும் தனது மகனை பார்க்க சிறைக்கு வந்த தாம்பரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கூறுகையில், “வெளியில் இருந்து தின்பண்டங்களை வாங்கி வந்தால் ஆகும் செலவை விட மிக குறைந்த விலைக்கு கிடைக்கிறது.

மேலும் வெளியில் வாங்கப்ப டும் பண்டங்கள், பலகட்ட சோத னைக்குப் பிறகுதான் கொண்டு செல்ல முடியும். இங்கு விற்கப்படும் பொருட்களை வாங்குவதால் சோதனையின்றி எளிதாக சிறைக்குள் எடுத்துச் செல்ல முடிகிறது’’ என்றார்.

இதுகுறித்து, சிறைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புழல் சிறையில் ரூ.45 லட்சம் செலவில் நவீன பேக்கரி அமைக்கப்பட்டு அதில், ரொட்டி, பன், குக்கீஸ் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ரொட்டி, பன் ஆகியவை அரசு மருத்துவமனைகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. இனிப்பு மற்றும் காரவகைகள் பாளையங்கோட்டை சிறையிலும், துணிமணிகள் திருச்சி சிறையிலும் தயாரிக்கப் பட்டு இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

நாங்கள் எதிர்பார்த்ததை விட, இப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சிறைக் கைதிகள் பல்வேறு தொழில்களை கற்றுக் கொள்வதுடன், அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x