Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM

சென்னை ஜி.ஹெச்.சில் கூடுதல் வசதிகள் : அமைச்சர் தொடங்கி வைத்தார்

நோயாளிகளுடன் உதவிக்கு வருபவர்கள் தங்குவதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் வசதிகளுடன் கூடிய இடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின் றனர். இவர்களுடன் நோயாளி களின் உறவினர்கள், நண்பர்களும் வருகின்றனர்.

நோயாளிகள் பரிசோதனை யில் இருக்கும் போது அவர் களுடன் வந்தவர்கள் உட்கார இடமின்றி படிக்கட்டுகளிலும் தரையிலும் உட்கார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, நோயாளி களுடன் வருபவர்கள் தங்கும் இடத்தை நவீனப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. ரூ.30 லட்சம் செலவில் இப்பணி கள் நடந்து முடிந்துள்ளன. நவீனப்படுத்தப்பட்ட இடத்தை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது:

அரசு பொது மருத்துவமனை யில் நோயாளிகளுடன் வருபவர்கள் தங்குவதற்காக அடுக்குமாடி கட்டிடங்கள் 1, 2ல் தங்கும் பகுதிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. நோயாளிகளுடன் வருபவர்கள் 70 பேர் அமரும் அளவுக்கு இரும்பு, கிரானைட் ஆகியவற்றால் செய்யப்பட்ட‌ இருக்கைகள் இந்த இடங்களில் உள்ளன.

சுவர்களில் 7 அடி உயரத்துக்கு ஓடுகள் ஒட்டப்பட்டுள்ளன. 24 மணி நேர சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வெயில், மழை பாதிக்காதபடி, வெளிச்சம் தரக்கூடிய மேற் கூரைகள், மின் விளக்குகள், மின் விசிறிகள், செயற்கை நீரூற்று ஆகியவையும் பொருத்தப் பட்டுள்ளன.

பூச்செடிகளும் வைக்கப்பட உள்ளன. இந்த இடங்களைப் பராமரிக்க‌ 24 மணி நேர பாதுகாவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x