

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் அதிக வாக்காளர்களை சேர்க்கும் நடவடிக் கையில் தேர்தல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன், தேர்தல் துறையினர் வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் வரை சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கக் கோரி 28 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் விண்ணப்பித்திருந்தனர்.
இதில், எத்தனை பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான இறுதிப்பட்டியல் வரும் 6-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இதற்கிடையே, சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது விண்ணப்பிக்காமல் போன அல்லது வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆர்வம் இல்லா தவர்கள் பற்றிய தகவல்களைச் சேக ரித்து அவர்களது பெயர்களை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் ஆணையம் உத்தி
இதற்காக, வாக்காளர்களுக்கான முறையான விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு (ஸ்விப்) என்னும் திட்டத்தின் கீழ் பல்வேறு வழிகளில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுப் போனவர்களின் பெயரைச் சேர்க்கும் புதிய உத்தியை தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னைத் தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெள்ளிக்கிழமை சந்தித்து விவாதம் நடத்த உள்ளார். இது குறித்து தேர்தல் துறையினர் வியாழக்கிழமை கூறியதாவது:
9 துறை செயலாளர்கள்
தமிழகத்தில் அதிக அளவிலான வாக்காளர்களைச் சேர்ப்பதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், சமூக நலத்துறை, சுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், வருவாய், பள்ளிக்கல்வி, போக்குவரத்து மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் செய்தி மற்றும் விளம்பரத் துறை ஆகியவற்றின் செயலாளர்களுடன், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் ஆலோசனை நடத்தவுள்ளார்.
பல லட்சம் உறுப்பினர்கள்
பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களில் பெருவாரியான உறுப்பி னர்கள் இருப்பார்கள். அவர்கள் வாக் காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்து விட்டனரா என்பதை அந்த துறையின் வாயிலாக அறிந்துகொள்வது எளிதான பணியாகும். அப்படி, பட்டியலில் பெயர் சேர்க்காதவர்களை, விண்ணப்பிக்கச் சொல்லி கேட்டுக் கொள்ளலாம். இவை குறித்து வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.