

பச்சையப்பன் கல்லூரியில் அடிப் படை வசதிகள் செய்து தரக் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாட தடை விதிக் கப்பட்டுள்ளது. தடையை மீறி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாடியபோது தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி முன்பு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸாரின் இந்த நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி முன்பு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
போராட்டம் குறித்து மாணவர் கள் கூறும்போது, "கல்லூரியில் தண்ணீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை" என்றனர். கல்லூரி முதல்வர் எஸ்.காளிராஜ் கூறியபோது, "மாணவர்கள் முறையாக கோரிக்கை வைத்தால், கல்லூரி நிர்வாகம் அதை பரிசீலித்து நிறைவேற்றும்" என்றார். பின்னர், பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.