

வினுபிரியா தற்கொலை வழக்கில் இருவர் சிக்கினர்
சேலம் ஆசிரியை வினுபிரியா தற்கொலை வழக்கில் 2 பேர் சிக்கினர். முகநூலில் மார்ஃபிங் செய்து ஆபாசமாக புகைப்படத்தை வெளியிட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர். ஒருதலைக் காதலால் இந்த விபரீதம் நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
சேலம் மாவட்டம் இளம் பிள்ளை அடுத்த இடங்கணசாலை பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை - மஞ்சு தம்பதி மகள் வினுபிரியா. தனியார் பள்ளி ஆசிரியை. இவரது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து ஆபாசமாக சமீபத்தில் முகநூலில் யாரோ வெளியிட்டனர். இதனால், மன உளைச்சல் அடைந்த வினு பிரியா கடந்த 27-ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து, சேலம் இளம்பிள்ளையை அடுத்த கல்பாரப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்(23) என்பவரை போலீ ஸார் கைது செய்து விசாரித் தனர். விசாரணையில், சுரேஷ் விசைத்தறி கூடத்தில் கண்காணிப்பாளராக பணி புரிந்தபோது, வினுபிரியா வுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வினுபிரியாவை ஒருதலை யாக சுரேஷ் காதலித்து வந்துள்ளார். மேலும், வினு பிரியாவின் பெற்றோரிடமும் சென்று சுரேஷ் பெண் கேட்டுள் ளார். அவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், வினுபிரியா வேறு ஒரு இளைஞரை காதலிப் பதாக நண்பர்கள் மூலம் சுரேஷ் அறிந்தார். தனது காதலை ஏற்காத வினுபிரியாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வினுபிரியாவின் படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து, முகநூலில் வெளியிட்டது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக இன்னொரு இளைஞரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் எஸ்பி அமித்குமார் சிங் கூறும்போது, ‘‘ வினு பிரியா புகைப்படத்தை அலைபேசியில் உள்ள சாஃப்ட்வேர் மூலம் ஆபாசமாக சித்தரித்து முக நூலில் கணக்கு தொடங்கி அதில் பதிவேற்றம் செய்துள்ளார். சுரேஷ் பயன்படுத்திய கைபேசி மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்துளோம்’’ என்றார்.
காவலர் இடைநீக்கம்
காவல்துறை நடத்திய விசாரணையில், மாநகரக் காவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், போலீஸார் சைபர் கிரைம் பிரிவை தொடர்பு கொண்டு விசாரணை யில் களம் இறங்கியதும், சைபர் கிரைம் தலைமைக் காவலர் சுரேஷ், அலைபேசியை லஞ்சமாக பெற்றதும் உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து, சுரேஷை இடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையர் சுமித்சரண் உத்தர விட்டார்.