13 மாவட்ட தலைநகரங்களில் கருவேல மரம் அகற்றப்பட்டதா?- மாவட்ட நீதிபதி ஆய்வுக்கு உத்தரவு

13 மாவட்ட தலைநகரங்களில் கருவேல மரம் அகற்றப்பட்டதா?- மாவட்ட நீதிபதி ஆய்வுக்கு உத்தரவு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றக் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உயர் நீதிமன்ற கிளை யில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மாவட்ட தலைநகர எல்லையில் கருவேல மரங்கள் அகற்றப் பட்டது தொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி, நில அளவையர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் உதவியுடன் நேரில் ஆய்வு செய்து ஜனவரி 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

முதன்மை மாவட்ட நீதிபதியின் ஆய்வுக்கு உதவியாக நில அளவையர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் தலைநகர எல்லை தொடர்பாக உரிய ஆவணங்களுடன் செல்வ தற்கு 13 மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in