தமிழக மக்களுக்காக பணியாற்றியதில் பெருமையடைகிறேன்: ஆளுநர் கே.ரோசய்யா நெகிழ்ச்சி

தமிழக மக்களுக்காக பணியாற்றியதில் பெருமையடைகிறேன்: ஆளுநர் கே.ரோசய்யா நெகிழ்ச்சி
Updated on
1 min read

தமிழக மக்களுக்காக பணியாற்றியதில் பெருமையடை வதாக ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த மாதம் 30-ம் தேதியுடன் முடிந்தது. இதை யடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை, மகா ராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவை பொறுப்பு ஆளுநராக நியமித்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார். அவர் இன்று பதவியேற்க உள்ள நிலையில், கே.ரோசய்யா தமிழக மக்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக ஆளுநராக கடந்த 5 ஆண்டுகள் பணியாற்றியதை பெருமையாகவும், சிறந்த மரியாதையாகவும் கருது கிறேன். நான் தமிழகத்தில் இருந்த காலங்களில் தமிழக மக்கள் என்னிடம் காட்டிய அன்பை நான் நினைவுகளாக எடுத்துச் செல்கிறேன். தமிழகம் இந்தியாவில் வளர்ச் சியடைந்த முதன்மை மாநிலமாகவும், கலாச்சார தலைநகராகவும் விளங்கு கிறது. சிறந்த உயர்கல்வி மற்றும் அமைதியை நேசிக்கும் கடின உழைப்பு கொண்ட மக்களால் தமிழகம் உயர்கல்வியின் மையமாக உள்ளது.

பல்கலைக்கழகங்களின் வேந்தராக, கல்வியின் தரத்தை வலுப்படுத்தவும், உயர்கல்வியில் ஆராய்ச் சியை ஊக்குவிக்க நான் முயற்சிகள் எடுத்தேன். முதல் வர் ஜெயலலிதா, அமைச் சரவை சகாக்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் தலை வர்கள், பல்கலைக்கழக முன் னாள் மற்றும் தற்போதைய துணைவேந்தர்கள், கல்வி யாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், அதி காரிகள் மற்றும் ராஜ்பவன் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக ஆளுநராக இருந்தபோது தமிழக மக்களின் அன்பு என்னை உணர்ச்சிவசப்படுத்தியது. எனது வாழ்த்துகளும், பிரார்த்தனையும் எப்போதும் தமிழக மக்களுடன் இருக்கும். அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் .

இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் 1933-ம் ஆண்டு பிறந்த கே.ரோசய்யா, ஆந்திர முதல்வராக இருந்தவர். ஆந்திராவில் நிதியமைச்சராக பணியாற்றியபோது, 14 ஆண்டுகள் குறிப்பாக தொடர்ந்து 7 ஆண்டுகள் சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். தீவிர அரசியலில் இருந்து விலகிய அவர், 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றார். தமிழக ஆளுநராக இருந்த காலத்தில், தமிழக சட்டப்பேரவையில் 7 முறை உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலையில், வித்யாசாகர் ராவ் (பொறுப்பு ஆளுநர்) பதவியேற்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in