வாடகை ஆட்டோ, கார்களை அரசே இயக்க வேண்டும்: வாசகர் கோரிக்கை

வாடகை ஆட்டோ, கார்களை அரசே இயக்க வேண்டும்: வாசகர் கோரிக்கை
Updated on
1 min read

பொதுமக்கள் பயனடையும் வகையில் அரசே வாடகை ஆட்டோக்கள் மற்றும் கார்களை இயக்க வேண்டும் என்று வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில், அரசு சார்பில் பேருந்துகள், சிற்றுந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. தொலைதூரப் பகுதிகளுக்கு அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம் பேருந்துகளை இயக்குகிறது. பேருந்து செல்ல முடியாத இடங்கள், நேரங்களில், பொது மக்கள் ஆட்டோக்கள், வாடகை கார்களை பயன்படுத்துகின்றனர். இதில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அரசே இவற்றை இயக்கலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக, ‘தி இந்து’ வின் உங்கள் குரலில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த குமார் கூறும்போது, ‘‘தமிழகத் தில் ஆட்டோவுக்கான அடிப்படை கட் டணம் ரூ.25 என அரசு நிர்ணயித்தாலும், ஆட்டோ ஓட்டுநர்கள் குறைந்தபட்சம் ரூ.40 கேட்கின்றனர்.

இதனால் பயணிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தற்போது கார்களை வாடகைக்கு விடும் சில நிறுவனங்கள், ஆட்டோ கட்டணத்தை விட குறைவான கட்டணத்தை வசூலிக்கின்றன. இவற்றை முறைப்படுத்த, அரசே தனி நிறுவனத்தை உருவாக்கலாம் அல்லது தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆட்டோ, கார்களை இயக்கலாம்” என்றார்.

இது தொடர்பாக போக்குவரத் துத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘அரசு தற்போது சிற்றுந்துகளை இயக்கி வருகிறது. இது ஓரளவுக்கு மக்கள் போக்குவரத்தை தன் வசமாக்கியுள்ளது. ஆட்டோ கட்டணத்தை அரசு கண்காணிக்கிறது. நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அரசே ஆட்டோ, கார்களை இயக்கு வது என்பது கொள்கை முடிவு தொடர்பானதாகும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in