30-ம் தேதி தேவர் சிலைக்கு அதிமுக மரியாதை

30-ம் தேதி தேவர் சிலைக்கு அதிமுக மரியாதை
Updated on
1 min read

முத்துராமலிங்கத் தேவரின் 107-வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 107-வது பிறந்த நாளையொட்டி வரும் 30-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை நந்தனம் அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துவார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைமை நிர்வாகிகள், அமைச்சர் கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எம்ஜிஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை, இளை ஞர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பிரிவுகளின் நிர்வாகிகள் கலந்துகொள்வர்.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in