காவல்துறை வாகனம் மோதி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

காவல்துறை வாகனம் மோதி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
Updated on
1 min read

காவல்துறை வாகனம் மோதி இறந்த 2 மாணவர்கள் குடும் பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

சென்னை அயனாவரம் பனந் தோப்பு ரயில்வே காலனி, 10 -வது தெரு அருகில், கடந்த 5-ம் தேதி காவல்துறை வாகன விபத்து ஏற்பட்டது.

இதில், அயனாவரத்தைச் சேர்ந்த விக்டர் மகன் ராம்குமார் சம்பவ இடத்திலும், ஓட்டேரியைச் சேர்ந்த டேவிட் மகன் சால மன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டும் இறந்தனர்.

இந்த செய்தியை கேட்டு நான் துயரமடைந்தேன். இருவரது குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் கிறேன். முதல்வர் நிவாரண நிதி யில் இருந்து இரு குடும்பங் களுக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in