Published : 12 Jun 2017 09:12 AM
Last Updated : 12 Jun 2017 09:12 AM

உடல் எடை குறைப்பு சிகிச்சையால் மாணவி மரணம்: ஈரோடு அருகே இயற்கை மருத்துவமனை மூடல்

ஈரோடு அருகே உடல் எடை குறைப்புக்காக சிகிச்சை பெற்ற மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் இயற்கை மருத் துவமனை மூடப்பட்டது. மாணவி யின் பிரேதப் பரிசோதனை அடிப்படையில் வழக்கை விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பச்சினம்பட்டியைச் சேர்ந்த வர் சக்தி. அரசுப் பேருந்து நடத்து நர். இவரது மனைவி மங்கையர்க் கரசி. நீதிமன்ற ஊழியர். இந்த தம்பதியின் ஒரே மகள் பாக்ய (17). இவர் ஓமலூரில் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கூடுதல் உடல் எடை பிரச்சினை இருந்ததால் மாணவி பாக்ய ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்த கந்தசாமியூரில் நவீன் பாலாஜி என்பவர் நடத்தி வந்த இயற்கை மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாக்ய கடந்த 8-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடலை பச்சினம்பட்டிக்கு கொண்டு வந்த மருத்துவமனை ஊழியர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாக்ய இறந்ததாக கூறினர்.

இதை ஏற்க மறுத்த பாக்ய யின் தாய் மங்கையர்கரசி, தனது மகளுக்கு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் அவர் உயிரிழந்தார் என்று கவுந்தப்பாடி போலீஸில் புகார் செய்தார். இதுதொடர்பாக சந்தே கத்துக்கு இடமான மரணம் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இதனிடையே, பாக்யயின் உடலை பிரேதப் பரிசோதனைக் காக அவரது பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வந்த இயற்கை மருத்துவமனை உரிமையாளர் நவீன் பாலாஜிக்கும், பாக்யயின் பெற்றோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து மாணவியின் தந்தை சக்தி கூறும்போது, ‘அந்த மருத்து வர் கொடுத்த மருந்தால் எனது 17-வயது மகளுக்கு 3-வயது குழந் தையைப் போல குணம் மாறிவிட் டது. எனது மகள் பேச்சு, நடை இல்லாமல் சுருண்டு விழத் தொடங்கினார். மருத்துவ மனையை நடிகர், நடிகைகளை வைத்து விளம்பரப்படுத்தி எல் லோரையும் ஏமாற்றிவிட்டார்.

தமிழக அரசால் அங்கீகரிக்கப் பட்ட உரிய சான்றிதழ் இல்லாமல் பாரம்பரிய முறைப்படி சித்த மருத்துவ சிகிச்சை வழங்குவதாக அவர் கூறி வருகிறார். ஆனால், பட்டயப் படிப்பை பாதியில் கைவிட்ட அவர் தன்னை மருத் துவர் எனக் கூறிக் கொள்கிறார்’ என்றார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்களை கோவை போலீஸார் சமாதானப்படுத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து பிரேதப் பரிசோதனை முடிந்து சடலத்தை ஒப்படைக்கும்போது, கோவை அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணம் கொடுக்க வேண்டுமென வற்புறுத்தியதாக சக்தி புகார் தெரிவித்தார். பின்னர் பிரேதப் பரிசோதனைக்குப் பின் பாக்ய யின் சடலத்தை அவரது பெற்றோர் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று தகனம் செய்தனர்.

இதனிடையே, பாக்யயின் பெற்றோர் கூறிய லஞ்ச புகார் குறித்து கோவை அரசு மருத்து வமனை இருப்பிட அலுவலர் சவுந்தரவேலிடம் கேட்டபோது, ‘சம்பந்தப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டது. விசாரணை அறிக்கை அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். முதற் கட்டமாக புகாருக்கு உள்ளான சுகாதாரப் பணியாளரை வேறு துறைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்றார்.

மாணவி இறப்புக்கு காரண மான மருத்துவமனை கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. தற்போதைய பிரச்சி னையை அடுத்து இந்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. மாணவி பாக்ய மரணம் குறித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் அதனடிப்படையில் வழக்கை விசாரிக்க இருப்பதாக கவுந்தப்பாடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x