Published : 21 Apr 2017 03:51 PM
Last Updated : 21 Apr 2017 03:51 PM

தமிழக ஆளுநர் வாகனத்திலிருந்தும் சிவப்பு சுழல் விளக்கு அகற்றம்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது அலுவலக வாகனத்திலிருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்றினார்.

மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் வண்ண சுழல் விளக்குகளை முக்கிய பிரமுகர்கள் வாகனங்களில் பொருத்துவது தொடர்பாக வரும் மே 1-ம் தேதி முதல் திருத்தங்கள் கொண்டுவர உள்ளது.

இதன் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி தன் வாகனத்தில் இருந்த வண்ண சுழல் விளக்கை அகற்றினார்.

பிரதமர் மோடி தன் வாகனத்தில் இருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்றியதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் வாகனத்தில் இருந்த சிவப்பு சுழல் விளக்கை அகற்றியதுடன், அமைச்சர்கள், அதிகாரிகள் வாகனங்களிலிருந்தும் அகற்ற உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது அலுவலக வாகனத்திலிருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்ற உத்தரவிட்டார். ஆளுநரின் வாகனத்திலிருந்து சிவப்பு சுழல் விளக்கை அவரது முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா அகற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x