

ஆர்.கே.நகரில் ஓ.பன்னீர்செல்வம் இன்று பங்கேற்கும் விழாவில் இடையூறு ஏற்படுத்த சசிகலா தரப்பினர் முயல்வதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் நாள் முழுவதும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில் இன்று காலை 10 மணிக்கு விழா தொடங்குகிறது. நலத்திட்ட உதவிகளை வழங்கி ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை யாற்ற உள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்ட பேனர் களை கிழிக்க சசிகலா தரப்பினர் முயற்சி செய்துள்ளனர். மேலும், இந்த விழாவுக்கு பல்வேறு இடையூறுகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். ரவுடிகளை வைத்து பிரச்சினை ஏற்படுத்தவும் முயற்சி செய்து வருகின்றனர். எனவே, நாளை (இன்று) சட்டம்-ஒழுங்கு பாதித்தால் அதற்கு முழு காரணம் சசிகலா குடும்பத்தினர்தான். அதற்கு இடம்தராமல் காவல் துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஒரு சார் பாக காவல்துறையினர் நடந்து கொள்ளக் கூடாது.
நலத்திட்ட உதவிகளை வழங் கிய பிறகு, சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தன் மனதில் சிந்தித்துக்கொண்டுள்ள கருத்து கள் அனைத்தையும் வெளிப்படுத் துவார்.
ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டிடிவி தினகரன் கடந்த 10 ஆண்டு களாக கட்சிக்கு வராதவர். அவர் அதிமுக துணை பொதுச் செயலாளராக பதவியேற்றது செல்லாது.
இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.