எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் மர்ம மரணம்: தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்

எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் மர்ம மரணம்: தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி அருகே எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரியின் 3 மாணவிகள் மர்மமாக உயிரிழந்த வழக்கில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் அந்த மாணவிகள் தற்கொலை செய்ய தூண்டப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய 3 பேர் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி கல்லூரி எதிரே உள்ள விவசாயக் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து கல்லூரி தாளாளர் வாசுகி, அவ ரது கணவர் சுப்பிரமணியன், மகன் ஸ்வாகத் வர்மா, பெரு.வெங்கடேசன், கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது சின்னசேலம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சுப்பிரமணியனை தவிர மற்ற 4 பேரையும் கைது செய்தனர்.

‘மாணவிகள் தற்கொலை செய்துகொள்ள வில்லை. அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டுள் ளனர்’ என்று இறந்த மாணவிகளின் குடும்பத் தினர் குற்றம் சாட்டினர். மேலும், நீதி விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

மோனிஷாவின் தந்தை தமிழரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை யடுத்து மோனிஷாவின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சிபிசிஐடி போலீஸார் நேற்று விழுப்புரம் தலைமை குற்ற வியல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் 328 சாட்சிகளின் ஆவணங்கள் உட்பட 450 பக்கங் கள் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப் பட்டுள்ளது. தற்கொலைக்கு தூண்டுதல், போலி யான ஆவணங்கள் தயாரித்தல், மிரட்டல் விடுத்தல், மோசடி, பெண்கள் மீதான வன்முறை, அனுமதிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்தல் போன்ற பிரிவுகள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்த வழக்கில் எஸ்விஎஸ் கல்வி அறக் கட்டளை, எஸ்விஎஸ் யோகா இயற்கை மருத் துவக் கல்லூரி, எஸ்விஎஸ் ஆராய்ச்சி கல்லூரி ஆகியவை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. 71 மாணவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 58 லட்சத்து 55 ஆயிரம் கூடுதல் கட்டணமாக வசூலித்ததாகவும் குற்றப்பத்திரி கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி நிர்வாகி கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in