ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை: இன்று விசாரணையை தொடங்குகிறார் முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன்

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை: இன்று விசாரணையை தொடங்குகிறார் முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன்
Updated on
1 min read

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனி விசாரணை ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமிக்கப் பட்டுள்ளார். அவர், நடுக்குப் பம் பகுதியில் இன்று தனது விசாரணையை தொடங்க உள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி சென்னை மெரினா கடற்கரை, மதுரை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 17 முதல் 23-ம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. மெரினா கடற்கரையில் நடை பெற்ற போராட்டத்தின்போது கடந்த 23-ம் தேதி வன்முறை வெடித்தது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 31-ம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி நடத்தப்பட்ட போராட் டத்தின் தொடர்ச்சியாக கடந்த 23-ம் தேதி சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நடந்த சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளுக்கான கார ணங்கள், சூழ்நிலைகள் குறித்து விசாரிக்க தனி விசா ரணை ஆணையம் அமைக்கப் படும்’ என அறிவித்தார். அதன் படி அமைக்கப்பட்டுள்ள விசா ரணை ஆணையத்தின் தலைவ ராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

3 மாதங்களில்

அந்த அரசாணையில், “ஜனவரி 23-ம் தேதி நடந்த சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு மூலமாக இருந்த காரணங் கள், காவல் துறையினரால் சூழ்நிலைக்கு ஏற்ப பலப்பிர யோகம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரித் தல், காவல்துறையினரின் செயல்பாட்டில் அத்துமீறல் இருந்ததா? அவ்வாறெனில் எடுக்கப்பட வேண்டிய நட வடிக்கைகள் குறித்து ஆலோ சனை வழங்குதல் ஆகிய பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்ளும்” என தெரிவிக் கப்பட்டுள்ளது. 3 மாதங்களில் இந்த ஆணையம் தனது அறிக் கையை அளிக்கும் என்றும் அதில் கூறப் பட்டுள்ளது.

இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தனது விசாரணையை இன்று (பிப்ரவரி 3) முதல் தொடங்கு கிறார். இதில், முதலாவதாக வன்முறையால் அதிகம் பாதிக் கப்பட்ட நடுக்குப்பம் மீனவ பகுதியை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in