

உலக வங்கி நிதி உதவியுடன் திருவாரூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகள், அதைச் சார்ந்த தடுப்பணை கட்டும் பணி மற்றும் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அரிச்சந்திரா ஆற்றில் நடைபெற்று வரும் பணிகளுக்கு அந்த ஆற்றிலேயே மணல் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கருப்பட்டி மூலை அரிச்சந்திரா ஆறு சிதிலமடைந் துவிட்டது என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து விவசாயி ஆறு முகம் கூறியது: அரிச்சந்திரா ஆற் றிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் குன்னியூர் வாய்க்கால், நெரிஞ் சனங்குடி வாய்க்கால், பள்ளிவர்த்தி வாய்க்கால்களில் தண்ணீர் பாசனத்துக்கு பாயமுடியாதபடி ஆறு பள்ளமாகவும், பாசன வாய்க்கால் மேடாகவும் மாறிவிட்டது.
இதையறிந்த குன்னியூர் பகுதி மக்கள் அரிச்சந்திரா ஆற்றில் மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மணல் எடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடைபெற்றுவரும் ஆறு தூர் வாருதல், ஆற்றில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு அரசு குவாரியாக அறிவிக்கப்பட்டுள்ள கொள்ளிடத்தில் இருந்துதான் மணல் எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒப்பந்தம் வழங்கும்போதே கட்டுமானப் பணிக்கு மணல் எடுப்ப தற்கான நிதியையும், இடத் தையும் அரசே ஒதுக்கிவிடுகிறது. ஆற்றைச் சீரமைப்பதற்கு பதிலாக மணலைச் சுரண்டி, ஆற்றை சின்னாபின்னப்படுத்த அதிகாரிகள் அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குன்னியூர், கருப்பட்டிமூலை பகுதி பொதுமக்களின் எதிர்ப்பு தொடரும் என்றார்.