

105 கி.மீ தூரம்; ரூ.45,000 கோடி மதிப்பில் - விரைவில் மத்திய அரசின் அனுமதி பெற முடிவு
சென்னையில் மேலும் 3 புதிய வழித்தடங்களில் 105 கி.மீ தூரம் ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்ட அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்பதற் காக தற்போது 2 வழித்தடங்களில் 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மீனம் பாக்கம் - ஆலந்தூர் கோயம் பேடு, பரங்கிமலை கோயம் பேடு வரையில் மெட்ரோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்ட திட்டத்தில் தற்போது நிலவரப்படி 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க மெட்ரோ ரயில்வே நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதேபோல், கோயம்பேடு நேரு பூங்கா சின்னமலை இடையே சுரங்கப்பாதையில் அடுத்த 2 மாதங்களில் மெட்ரோ ரயில்சேவை தொடங்கப்படு கிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விரைவில் இந்த வழித்தடத்தில் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கவுள்ளார்.
இதற்கிடையே, மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தில் 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்குவது தொடர்பாக பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து மயிலாப் பூர் வழியாக சிறுச்சேரி வரையிலும், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு, பெரும் பாக்கம் வழியாக சோழிங்கநல் லூர் வரையிலும், நெற்குன்றத் தில் இருந்து கோயம்பேடு வழி யாக வி.இல்லம் வரையிலும் என 3 வழித்தடங்களில் மொத் தம் 105 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக் கப்படவுள்ளன. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனம் இதற்கான முழு அறிக்கையை தமிழக அரசிடம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னை போன்ற பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் அவசியமாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டமாக 3 புதிய வழித்தடங்களில் மொத்தம் 105 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில்வே அதிகாரிகளும், ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எக்னாமிக்ஸ் சர்வீஸ் (ரைட்ஸ்) நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி அறிக்கையை தயாரித்தோம்.
அதன்படி, ரயில் நிலையங் கள் அமைப்பது, எங்கெல்லாம் சுரங்க வழிப்பாதைகள், உயர் மட்ட ரயில் பாதைகள் அமைப் பது என்பது தொடர்பாக இடங் களைத் தேர்வு வரைப்படங் களைத் தயாரித்துள்ளோம். இத்திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் வழங்கியுள்ளோம். இத்திட்டத்துக்கு மொத்தம் ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் நிதி மற்றும் ஜப்பான் நாட்டின் நிதி நிறுவனம் கடன் வசதி மூலம் முதலீடுகள் திரட்டப்படும். மேலும், 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு விரைவில் மத்திய அரசின் அனுமதியை பெறும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.