Published : 16 Sep 2016 11:09 am

Updated : 14 Jun 2017 19:23 pm

 

Published : 16 Sep 2016 11:09 AM
Last Updated : 14 Jun 2017 07:23 PM

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது பேரனை காப்பாற்ற ரத்தத்துக்காக அலையும் தம்பதி

8

கோவை அருகே தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவ னுக்கு சிகிச்சை அளித்து உயிரைக் காப்பதற்காக 20 நாட்களுக்கு ஒருமுறை ரத்தத்துக்காக அவரது தாத்தவும், பாட்டியும் அலைந்து வருகின்றனர்.

சூலூர் அருகே உள்ள பாப்பம் பட்டி கிராமம் ஸ்ரீபதி நகரில் விவசாய நிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர் வீரன்(50), முத்தம்மாள்(45) தம்பதி. இவர்களது மகள் அம்சவேணி. பிரசவத்தின்போது இறந்துவிட்டார். இவரது கணவர் 2 மாதங்களில் மறுமணம் செய்துகொண்டார். இவர்களது மகன் சிவப்பிரகாஷ்(8), தாத்தா, பாட்டியுடன் தங்கி பாப்பம் பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.


20 நாட்களுக்கு ஒருமுறை

உடல்நலக் குறைவால் பாதிக் கப்பட்ட சிறுவனை பரிசோதித்த போது, ஹீமோகுளோபின் புரதக் கட்டமைப்பு குறைபாட்டால் ஏற் படும் கொடிய மரபணு நோயாக அறியப்படும் தலசீமியா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இந்நோய் பாதிப்பால் உடலில் ரத்தம் உற்பத்தியாகாத நிலையில் 20 நாட்களுக்கு ஒருமுறை என, அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, ரத்தத்தை ஏற்றிக்கொண்டு வருகின்றனர். சிறுவனின் ரத்தப் பிரிவு ஏபி பாசிட்டிவ் வகை. விவசாய நிலத்தை பராமரித்துக் கொள்வதற்காக இருவருக்கும் சேர்த்து மாதம் ரூ.9 ஆயிரம் ஊதி யம் வழங்கப்படுகிறது. இதை வைத்து குடும்பத்தை நடத்திக் கொண்டும், சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சையையும் கவனித்து வருகின்றனர்.

இதுகுறித்து முத்தம்மாள் கூறும் போது, “எனது பேரன் 20 நாட்களுக்கு ஒருமுறை சோர்ந்துபோய் அழ ஆரம்பித்துவிடுவான். நான் அவனை தூக்கிக்கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு செல்வேன். உள்நோயாளிகள் பிரிவில் அவனை அனுமதித்தவுடன், ஏபி பாசிடிவ் வகை ரத்தம் கொண்ட யாரையாவது அழைத்து வாருங்கள் என்று சொல்வார்கள். மருத்துவமனை, அதனை சுற்றியுள்ள இடங்கள் முழுவதையும் சுற்றி வந்து ஒவ்வொருவரையும் பார்த்து ரத்தம் கொடுத்து உதவுமாறு கேட்பேன். ஒவ்வொரு முறையும் 2 யூனிட் ரத்தம் கிடைத்து அதனை இவனுக்கு ஏற்றி வீடு திரும்ப 5 நாட்களுக்கு மேல் ஆகிவிடும். 8 ஆண்டுகளாக இப்படித்தான் வாழ்க்கை நடக்கிறது” என்றார்.

எங்களுக்குப் பிறகு..

சிறுவனின் தாத்தா வீரன் கூறும் போது, ‘‘எங்க குடும்ப வழக்கப் படி, ரத்த உறவுக்குள்தான் திரு மணம் நடத்துவோம். எனது மகளுக் கும் அவ்வாறே திருமணம் செய் தோம். அதுதான் இப்போது பிரச்சினையாக வந்து நிற்கிறது. இந்த நோய் வந்ததுக்கு முக்கியக் காரணமாக இதைத்தான் மருத்துவர்களும் சொன்னார்கள். இவனை எங்களுக்கு அப்பறம் யார் கவனிப்பார்கள் என நினைத்தால் கஷ்டமாக உள்ளது” என்றார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எட்வின்ஜோ கூறும்போது, “அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட வகை ரத்தம் இல்லாதபோது சம்பந்தப்பட்ட ரத்தம் யாரிடம் இருக்கிறது என்ற விவரத்தைக் கொடுத்து நோயாளியின் உறவினர் மூலமாகவே அணுகச் சொல்கிறோம்” என்றார்.

தலசீமியா தாக்கம்

கோவை அரசு மருத்துவக் கல் லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவ மனை பொது மருத்துவப் பிரிவு துறைத் தலைவர் டி.ரவிக்குமார் கூறும்போது, “ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் ஏற்படும் பிரச்சினை காரணமாக தலசீமியா நோய் உருவாகிறது. தலசீமியாவில் வெவ்வேறு வகைகள் உள்ளன. ரத்த உற்பத்தி குறைபாட்டால் ரத்தசோகை ஏற்பட்டு உடல் தளர்ந்து இருப்பார்கள். அவர் களுக்கு அடிக்கடி ரத்தம் செலுத்த வேண்டி வரும். ரத்தம் செலுத்தி னாலும் அதன் மூலமும் பிரச்சினை கள் வரலாம்.

உறவுகளில் திருமணம்

மரபணு மாற்றம் காரணமாக ஏற்படுகிறது என்பதால் எலும்பு மஜ்ஜை அறுவைச் சிகிச்சை, ஸ்டெம்செல் சிகிச்சை ஆகியவை குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளாக கண்டறியப்பட் டுள்ளன. ஆனால், இந்த சிகிச் சையை எடுத்துக்கொள்ள அதிக செலவு ஆகும்.

சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதால் மட்டுமே இந்நோய் ஏற்படுகிறது என்று சொல்ல முடியாது. பொது வாக நெருங்கிய உறவினர்களுக்கு இடையே திருமணம் செய்யும்போது நோய் தாக்கம் அதிகம் இருக்கும்” என்றார்.


தலசீமியா நோய்உறவுகளில் திருமணம்கோவைசிவப்பிரகாஷ்கோவை அரசு மருத்துவமனை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x