தெற்கு ரயில்வே புதிய கூடுதல் பொதுமேலாளர் பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வே புதிய கூடுதல் பொதுமேலாளர் பொறுப்பேற்பு
Updated on
1 min read

தெற்கு ரயில்வேயின் புதிய கூடுதல் பொதுமேலாளராக பி.கே.மிஸ்ரா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை ஐஐடியில் முதுநிலை பொறியியல் படித்துள்ள பி.கே.மிஸ்ரா, கடந்த 1980-ம் ஆண்டு பொறியாளர்களுக்கான இந்திய ரயில்வே சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ரயில்வேயில் பணியில் சேர்ந்தார். தெற்கு ரயில்வே, வடகிழக்கு ரயில்வேக்களில் பல்வேறு பொறுப்புகள் வகித்து பணியாற்றியுள்ளார். குறிப்பாக, சென்னை ரயில்வே மண்டலத்தில் மேலாளராகவும், தலைமை திட்ட அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். சென்னை கடற்கரை தாம்பரம் அகலப் பாதை திட்டப் பணியில் 4 மாதங்களுக்கு பணி யாற்றியுள்ளது குறிப் பிடத்தக்கது. சுவீடன், ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட் சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று மேம்பால பணிகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளார். இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொதுமேலாளராக பி.கே.மிஸ்ரா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in